திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆடிப்பூர விழா


திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆடிப்பூர விழா
x

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர்

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தியாகராஜர் கோவில்

திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வடக்கு திசையில் கமலாம்பாள் அம்மன் அருள் பாலித்து வருகிறார். திருவாரூர் தியாகராஜா் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று இரவு தொடங்கியது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையுடன் வீதியுலா நடைபெற்றது. பின்னர் கமலாம்பாள் சன்னதியில் உள்ள கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து ரிஷப படம் வரையப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மங்கள இசை முழங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இன்று கமலாம்பாளுக்கு கேடக உற்சவம் நடைபெற்றது.

தேரோட்டம்

விழா நாட்களில் பூதம், யானை, வெள்ளி ரிஷபம், கைலாசர் வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தேரோட்டம் வருகிற 31-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறபட்டு தேரில் எழுந்தருளுகிறார். மாலை 3.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறுகிறது. ஆகஸ்டு 1-ந் தேதி ஆடிப்பூர விழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி ராஜராஜேஸ்வரன் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story