தோகைமலை ஒன்றியக்குழு கூட்டம்


தோகைமலை ஒன்றியக்குழு கூட்டம்
x

தோகைமலை ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

கரூர்

தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய சேர்மன் லதாரெங்கசாமி தலைமை தாங்கினார். துணை சேர்மன் பாப்பாத்தி சின்னவழியான், ஒன்றிய ஆணையர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கழிவறை அமைத்தல், பழுதான கட்டிடங்களை இடித்தல், பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள் பழுதுபார்த்தல் உள்பட பல்வேறு பணிகளுக்காக செலவு குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதனை அதிகாரி பழனிகணேசன் வாசித்தார். இதில், கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story