தூத்துக்குடி, சில்லாங்குளம் பள்ளி மாணவி மரண வழக்கு : சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு
பள்ளி மாணவி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
கோவில்பட்டி ,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை சில்லாங் குளத்தில் செயல்பட்டு வரும் மேல்நிலைப் பள்ளி கழிவறையில் அதே பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். . தகவல் அறிந்த போலீசார், உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் மாணவியின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் தங்களுக்கு தெளிவான தகவல் அளிக்கப்படவில்லை என மாணவியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், மாணவியின் உறவினர்கள் திடீரென மாணவி தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் பள்ளி மாணவி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.முதற்கட்ட விசாரணையை பள்ளியில் சிபிசிஐடி தொடங்கியது.