தூத்துக்குடி மாவட்ட நாடார் பேரவை கூட்டம்


தூத்துக்குடி மாவட்ட நாடார் பேரவை கூட்டம்
x
தினத்தந்தி 15 May 2023 12:30 AM IST (Updated: 15 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட நாடார் பேரவை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

புதுக்கோட்டை அருகே உள்ள சேர்வைக்காரன் மடத்தில் தமிழ்நாடு நாடார் பேரவையின் தூத்துக்குடி மாவட்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ரவிசேகர் தலைமை தாங்கினார். செயலாளர் மாரியப்பன், பொருளாளர் மில்லை தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத் தலைவர் இருதயக்குமார் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில தலைமை நிலைய செயலாளர் சிவக்குமார், தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் ஆரோக்கியபுரம் ரவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில தலைமை நிலைய செயலாளர் சிவகுமார் பேசுகையில், 'தமிழகத்தில் பனைமரத் தொழிலாளர்கள் முன்னேற்றத்துக்காக கள் இறக்கி விற்பனை செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும். ரேஷன் கடைகளில் பனங்கருப்பட்டி விற்பனை செய்ய வேண்டும். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் ஆகியவை கூடுதலாக அமைக்க வேண்டும். சூசைபாண்டியாபுரம் பகுதியில் 4-வது பைப்லைன் மூலம் குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தருவைகுளத்தில் நிரந்தரமாக 108 ஆம்புலன்ஸ் நிறுத்த ஏற்பாடு செய்துதர வேண்டும். காமராஜர் குறித்து அவதூறு பரப்பும் தலைவர்களுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம். ராவணகோட்டம் படத்தில் காமராஜர் குறித்து அவதூறு காட்சிகளை நீக்க வேண்டும். இல்லையென்றால், தியேட்டர்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும்' என்றார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் சிவத்தையாபுரம் சரவணன், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் சகாயராஜ், மற்றும் நிர்வாகிகள் சக்திவேல், கதிர், பாக்யராஜ், ரஞ்சித், மிக்கேல் ராஜ் ஜெமினி, லிங்கராஜ், ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story