தூத்துக்குடி வக்கீல் கொலை வழக்கு:மதுரை கோர்ட்டில் 3 பேர் சரண்
தூத்துக்குடி வக்கீல் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மூன்று பேர் மதுரை கோர்ட்டில் சரணடைந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அருகே உள்ள சோரீஸ்புரத்தில் வக்கீல் முத்துக்குமார் நேற்று முன்தினம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொலைவழக்கில் தேடப்பட்டு வந்த ஆறுமுகநேரி சீனந்தோப்பு கந்தசாமிபுரத்தை சேர்ந்த சிங்கராஜா மகன் வேல்முருகன் (வயது 25), கீழக்கடையத்தை சேர்ந்த காமராஜ் மகன் ராஜரத்தினம் (25), நெல்லை மாவட்டம் பெரும்பத்து கம்மவார் பாளையத்தை சேர்ந்த ஜெயக்குமார் மகன் இலங்கேசுவரன் (30) ஆகிய 3 பேரும் மதுரை 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு பாக்கியராஜ் முன்னிலையில் நேற்று ஆஜர் ஆனார்கள். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். சரணடைந்த 3 பேரையும் சிப்காட் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story