தூத்துக்குடி மேலசண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா


தூத்துக்குடி மேலசண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா
x

தூத்துக்குடி மேலசண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மேலசண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவை கடந்த 28-ந் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி முதல் நாளில் வளையல் அலங்காரத்திலும், 2-வது நாளில் பூப்பாவாடை அலங்காரத்திலும் அம்மன் காட்சி அளித்தார். 3-வது நாளான நேற்று நாகர்புற்று அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


Next Story