தூத்துக்குடி மேலூர் சக்தி பீடத்தில்கஞ்சிக் கலயம் ஊர்வலம்


தூத்துக்குடி மேலூர் சக்தி பீடத்தில்கஞ்சிக் கலயம் ஊர்வலம்
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மேலூர் சக்தி பீடத்தில் கஞ்சிக் கலயம் ஊர்வலம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மேலூர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு கலசவிளக்கு வேள்வி பூஜை நடந்தது. பூஜையை பிருந்தா தலைமையில் உஷாதேவி தொடங்கி வைத்தார். இந்த வேள்வி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து 121 சக்தி பீட பக்தர்கள் அக்கினி சட்டி ஏந்தி ரதவீதியில் வலம் வந்தனர். பின்னர் கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. தூத்துக்குடி சிவன்கோவில் முன்பு இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை தமிழக அரசின் மகளிர் நலவாரிய மாநில உறுப்பினர் சொர்ணலதா தொடங்கி வைத்தார். தொடர்ந்து 504 பக்தர்கள் கஞ்சிக் கலயத்தை ரதவீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். இந்த ஊர்வலம் சக்தி பீடத்தில் முடிவடைந்தது. அங்கு பாலாபிஷேகம், பூச்சொரிதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story