தூத்துக்குடி நகர் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


தூத்துக்குடி நகர் கோட்ட  மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி நகர் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி நகர் கோட்டத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி பத்திரகாளியம்மன் கோவில் கலைஅரங்கில் நடக்கிறது. கூட்டத்துக்கு தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை தாங்குகிறார். எனவே மின் நுகர்வோர்கள், குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் ராம்குமார் தெரிவித்து உள்ளார்.


Next Story