பென்காக் சிலாட் போட்டியில் தூத்துக்குடி வீரர்கள் வெற்றி
தென்னிந்திய அளவிலான பென்காக் சிலாட் போட்டியில் தூத்துக்குடி வீரர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தூத்துக்குடி
தென்னிந்திய அளவிலான பென்காக் சிலாட் விளையாட்டுப் போட்டி கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் நடந்தது. இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் தமிழக அணி சார்பில் பங்கேற்றனர். இந்த போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதில் தூத்துக்குடியை சேர்ந்த வீரர்கள் 2 தங்கம், 4 வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற வீரர்களை தூத்துக்குடி மாவட்ட பென்காக் சிலாட் அசோசியேசன் தலைவர் டி.டி.சி.ராஜேந்திரன், துணைத் தலைவர் அந்தோணி, மாவட்ட செயலாளர் மனோ, பொருளாளர் கரிகாலன் மற்றும் பயிற்சியாளர் முத்துசங்கர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story