தூத்துக்குடியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்


தூத்துக்குடியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
x

தூத்துக்குடியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் உப்பளம் சார்ந்த பகுதிகளில் உயர் மின் அழுத்த பாதையில் பழுதுகள் சீரமைத்தல், சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்தல், மரக்கிளைகளை அகற்றுதல் மற்றும் ஆங்காங்கே மின்பாதையில் அறுந்து தொங்கி கொண்டு இருக்கும் பட்டங்களை அகற்றும் பணி இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது இதனால் தருவைகுளம் உப்பளம் சார்ந்த பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இதே போன்று தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடக்கிறது. இதனால் காற்றுத்திறப்பான் மாற்றி அமைக்கும் பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. ஆகையால் போல்டன்புரம், கோர்ட்டு, திருச்செந்தூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வினியோக செயற்பொறியாளர் தனலட்சுமி தெரிவித்து உள்ளார்.


Next Story