தூத்துக்குடியில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்


தூத்துக்குடியில் குறு, சிறு, நடுத்தர   தொழில் நிறுவன பணியாளர்களுக்கு   சிறப்பு மருத்துவ முகாம்
x

தூத்துக்குடியில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.

மருத்துவ முகாம்

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 27-ந் தேதி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சர்வதேச தின விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம், சிப்காட் திட்ட அலுவலகம், சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை ஆகிய துறைகள் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று சிப்காட் திட்ட அலுவலக வளாகத்தில் நடந்தது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பரிசோதனை, பொது மருத்துவம், கண், தோல், காது மூக்கு, தொண்டை ஆகிய பிரிவு சிறப்பு டாக்டர்கள் முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டனர்.

பரிசோதனை

முகாமில் சிப்காட் வளாகத்தில் உள்ள 70 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். ஆரம்ப நிலை பரிசோதனையில் குறைபாடுகள் கண்டறியப் பட்டவர்களுக்கு தீவிர பரிசோதனைகளும் செய்யப்பட்டு அறிக்கைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அ.சுவர்ணலதா, சிப்காட் திட்ட அலுவலர் லியோவாஸ், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன், மாநகர நல அலுவலர் அருண்குமார், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வகுமார், சிப்காட் தொழில் நிறுவனங்களின் சங்கத் தலைவர் ஜோ பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story