முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் பிறந்தநாள் வாழ்த்து


முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் பிறந்தநாள் வாழ்த்து
x

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனுக்கு வெள்ளிக்கிழமை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

பிறந்தநாள் விழா

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் மற்றும் பண்டாரவிளையில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆள் உயர மாலை, சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்தும், அனைவருக்கும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சிகளில் மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் திருப்பாற்கடல், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ரா. சுதாகர், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சி.காசிராஜன் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story