தூத்துக்குடிதெற்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள் தேர்தல்
தூத்துக்குடிதெற்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள் தேர்தல் புதன்கிழமை முதல் இரண்டு நாட்கள் நடப்பதாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தி.மு.க. 15-வது பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கனவே கிளை, வார்டு, வட்டம், பேரூராட்சி, நகராட்சி கழக தேர்தல் முடிவடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஒன்றியக் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நாளை(புதன்கிழமை) முதல் 2 நாட்கள் நடக்கிறது.
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் நாளை(புதன்கிழமை) வீரபாண்டியன் பட்டணம் ஜோ ஹாலில் காலை 9 மணிக்கு திருச்செந்தூர் ஒன்றியம், 10 மணிக்கு உடன்குடி கிழக்கு ஒன்றியம், 10.30 மணிக்கு உடன்குடி மேற்கு ஒன்றியம், 11 மணிக்கு ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றியம், 12 மணிக்கு ஆழ்வார்திருநகரி மத்திய ஒன்றியத்துக்கும், மதியம் 12.30 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றியம், 1 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் மத்திய ஒன்றியம், 1.30 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றியம், 2.30 மணிக்கு கருங்குளம் தெற்கு ஒன்றியம், 3 மணிக்கு ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியம், 3.30 மணிக்கு சாத்தான்குளம் வடக்கு ஒன்றியம், 4 மணிக்கு சாத்தான்குளம் மத்திய ஒன்றியம், 4.30 மணிக்கு சாத்தான்குளம் தெற்கு ஒன்றியம் ஆகிய 8 ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடக்கிறது.
நாளைமறுநாள்(வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு வீரபாண்டியன்பட்டினம் ஜோ ஹாலில் வைத்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம், 10 மணிக்கு தூத்துக்குடி மத்திய ஒன்றியம், 10.30 மணிக்கு தூத்துக்குடி மேற்கு ஒன்றியம், 11 மணிக்கு கருங்குளம் கிழக்கு ஒன்றியம், 11.30 மணிக்கு கருங்குளம் வடக்கு ஒன்றியம், 12.30 மணிக்கு ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம், 1 மணிக்கு ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியம் ஆகிய 7 ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தல் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர், தலைமை தணிக்கைக் குழு உறுப்பினர் பெ.குழந்தைவேலு முன்னிலையில் அந்தந்த ஒன்றிய தேர்தல் ஆணையர்களால் நடத்தப்படும். நிர்வாகிகளுக்கு நடைபெறும் தேர்தலில் போட்டியிடவிரும்பும் கழக உறுப்பினர்கள் விண்ணப்ப படிவங்களை கழக விதிமுறைகளின் படி பூர்த்தி செய்து ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கான வேட்புமனு கட்டணம் ரூ.1000, செயற்குழு உறுப்பினர்களுக்கான கட்டணம் ரூ.100, செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.