ஸ்கிப்பிங்கில் தூத்துக்குடி மாணவர் சாதனை


ஸ்கிப்பிங்கில் தூத்துக்குடி மாணவர் சாதனை
x

ஸ்கிப்பிங்கில் தூத்துக்குடி மாணவர் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி பாரதி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் சண்முகவேல் (வயது 11). இவர் தனியார் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று 65 நிமிடத்தில் 10 ஆயிரம் முறை ஸ்கிப்பிங் செய்து சாதனை படைத்து உளளார். இதனை உலக சூப்பர் டெலண்ட் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனத்தின் தலைவர் கராத்தே நடராஜன் தலைமையிலான குழுவினர் பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற மாணவன் சண்முகவேலை, பெற்றோர் மற்றும் பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் பாராட்டினர்.


Next Story