மாநில அளவிலான சிலம்ப போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் வெற்றி


மாநில அளவிலான சிலம்ப போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் வெற்றி
x

மாநில அளவிலான சிலம்ப போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

மதுரை கூடல் நகரில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. இதில் தூத்துக்குடியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் சிலம்பம் தனி திறமை போட்டி பிரிவில் சிறப்பாக விளையாடி முதல் 3 இடங்களையும் பிடித்து மாநில சாம்பியன் பட்டத்தை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த ஆசான் சுடலைணி, தலைமை பயிற்சியாளர் வெள்ளையாராஜா, பயிற்சியாளர் முத்துஅருணா ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர். இந்த மாணவ, மாணவிகள் அடுத்த மாதம் திருச்சியில் நடைபெறும் தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


Next Story