தூத்துக்குடி, திருச்செந்தூர் ரெயில்கள் நேரம் மாற்றம்


தூத்துக்குடி, திருச்செந்தூர்  ரெயில்கள் நேரம் மாற்றம்
x
தினத்தந்தி 27 July 2023 12:15 AM IST (Updated: 27 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி, திருச்செந்தூர் ரெயில்கள் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் செல்லும் சில ரெயில்களின் நேரம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14-ந் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சிமணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் சிறப்பு பயணிகள் ரெயில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து மாலை 7.20-மணிக்கு பதிலாக, இரவு 8.25-மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.

இதே போன்று திருச்செந்தூர்-நெல்லை பாசஞ்சர் ரெயில் காலை 8.25-மணிக்கு புறப்பட்டு 10 மணிக்கு நெல்லையை வந்தடைந்தது. இந்த ரெயில் தற்போது காலை 8.15-மணிக்கு புறப்பட்டு வழக்கம் போல் 10 மணிக்கு நெல்லையை வந்தடையும். செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதியாக நேரம் மாற்றப்பட்டு உள்ளது. திருச்செந்தூரில் இருந்து 8.10-மணிக்கு புறப்பட்டு 2.40-க்கு திருச்சியை சென்றடைந்தது. இந்த ரெயில் இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு 2.40 மணிக்கு திருச்சியை சென்றடையும் வகையில் நேரம் மாற்றப்பட்டு உள்ளது.

இந்த தகவல் தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story