தோப்புவிளை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம்


தோப்புவிளை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

தோப்புவிளை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தூத்துக்குடி

தட்டார்மடம் அருகே தோப்புவிளை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கொடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் அதிகாலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், மாலையில் முதலாம் கால யாகசாலை பூஜை நடந்தது.

நேற்று காலையில் யாகசாலை பூஜையை தொடர்ந்து சுடலைமாட சுவாமி, பைரவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலையில் மாவிளக்கு பூஜை, இரவில் முளைப்பாரி எடுத்தல், தீபாராதனை, இசை பட்டிமன்றம் நடந்தது.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் பால்குடம் எடுத்தல், அபிஷேகம், அகல்விளக்கு பூஜை, வில்லிசை, மதியம் அலங்கார பூஜை, அம்மன் மஞ்சள் நீராடுதல், மஞ்சள் பெட்டி எடுத்தல், வில்லிசை, அலங்கார தீபாராதனை நடக்கிறது.

நாளை (புதன்கிழமை) காலையில் தீபாராதனை, மாலையில் விளையாட்டு போட்டி, இரவில் சிறுவர் சிறுமியர் கலைநிகழ்ச்சிகள், பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.


Next Story