தோப்புவிளைமுத்தாரம்மன் கோவில்கொடை விழா:திங்கட்கிழமை தொடங்குகிறது


தோப்புவிளைமுத்தாரம்மன் கோவில்கொடை விழா:திங்கட்கிழமை தொடங்குகிறது
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தோப்புவிளை முத்தாரம்மன் கோவில்கொடை விழா திங்கட்கிழமை தொடங்குகிறது

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே தோப்புவிளை முத்தாரம்மன் கோவில் கொடை விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அன்று காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம், 11 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு மாவிளக்கு பூைஜ, இரவு 7 மணிக்கு முளைப்பாரி எடுத்தல், 8 மணிக்கு வாணவேடிக்கை, 8.30 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு பக்தி இசை நடக்கிறது.

22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு பால்குடம் ஊர்வலம், 9.30 மணிக்கு அபிஷேகம், 11.30 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணிக்கு அலங்கார பூஜை, 12.30 மணிக்கு அன்னதானம், 1.30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், 3 மணிக்கு அம்மன் மஞ்சள் வீதி உலா வருதல், இரவு 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு மஞ்சள்பெட்டி ஊர்வலம், 10 மணிக்கு வில்லிசை, 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

23-ந்தேதி (புதன்கிழமை) காலை 8 மணிக்கு அன்னதானம், 8.30 மணிக்கு தீபாராதனை, மதியம் 3 மணிக்கு சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகள், இரவு 9 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறும். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

-----


Next Story