தொரட்டைய்யனார் கோவில் குடமுழுக்கு
திருத்துறைப்பூண்டி அருகே தொரட்டைய்யனார் கோவில் குடமுழுக்கு நடந்தது.
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே பாமணி சுந்தரபுரியில் உள்ள தொரட்டைய்யனார் கோவிலில் குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வந்தது. திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு நேற்று நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று காலை புனித தீர்த்தங்கள் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகையன் மற்றும் விழா குழுவினர் பாமனி, சுந்தரபுரி கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story