வாய்க்காலை முழுமையாக தூர்வாரக்கோரிபொதுமக்கள் சாலை மறியல்


வாய்க்காலை முழுமையாக தூர்வாரக்கோரிபொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே வாய்க்காலை முழுமையாக தூர்வாரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே வாய்க்காலை முழுமையாக தூர்வாரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆண்டியூர் வாய்க்கால்

சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுத்தெரு உள்ளது. இந்த தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடியிருப்பு அருகில் ஆண்டியூர் வாய்க்கால் உள்ளது.

இந்த வாய்க்கால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படவில்லை. தற்போது அந்த வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு தூர்ந்து போய் உள்ளது. இந்த வாய்க்காலில் சிறிது தூரம் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

மேட்டுத்தெரு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆண்டியூர் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை- சீர்காழி சாலையில் தென்பாதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டியூர் வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக தூர்வார வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன் மற்றம் கிராம நிர்வாக அலுவலர் ரேவதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாய்க்காலை முழுமையாக தூர்வார உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் மயிலாடுதுறை, சீர்காழி, நாகப்பட்டினம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story