மோதலில் ஈடுபட்டவர்கள் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவு


மோதலில் ஈடுபட்டவர்கள் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவு
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கலசபாக்கம் அருகே முன் விரோத காரணமாக கோஷ்டி மோதல் ஏற்பட்டு கலவரத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகியுள்ளனர்.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே முன் விரோதம் காரணமாக நடந்த தகராறில் மோதலில் ஈடுபட்டவர்கள் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகியுள்ளனர்.

காளை விடும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் திருவிழாவில் காளை விடும் விழாவில் இரு தரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக இரு தரப்பினருக்கிடையே அவ்வப்போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையின் போது ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் ஒருதரப்பினர் அவர்களது வீட்டிற்கு முன்பு பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் போது கெங்கவரம் பகுதியை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தபோது தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து மீண்டும் இரு தரப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் ஒரு தரப்பினருக்கு படுகாயம் ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் குறித்து கடலாடி போலீசார் இருதரப்பினர் இடையே 30-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து 6 பேரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

தலைமறைவு

இந்த நிலையில் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டனர். தொடர்ந்து ஆதமங்கலம் புதூர் பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளன. ஆதமங்கலம் புதூர், வெங்கட்டம்பாளையம், கெங்கவரம் ஆகிய கிராமங்களில் உள்ள இளைஞர்கள் இடையே அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்பட்டு வருவதை தடுக்க ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story