சென்னையில் இருந்து தனியாக வாகனங்களில் செல்வோர் தாம்பரம் பாதையை தவிர்க்க வேண்டுகோள்


சென்னையில் இருந்து தனியாக வாகனங்களில் செல்வோர் தாம்பரம் பாதையை தவிர்க்க வேண்டுகோள்
x
தினத்தந்தி 20 Oct 2022 2:07 PM IST (Updated: 20 Oct 2022 2:28 PM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து தனியாக வாகனங்களில் செல்வோர் தாம்பரம் பாதையை தவிர்க்குமாறு போக்குவரத்துத்துறை வலியுறுத்தியுள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்கள், பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். பெரும்பாலான ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

இந்த நிலையில், மக்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்ல அரசுப் பேருந்துகளில் 1.5 லட்சம் பேர் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையின் இருந்து தனியாக கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் மக்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பாதையை தவிர்த்து, திருப்போரூர்- செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர்- செங்கல்பட்டு சாலை வழியாக பயணத்தை மேற்கொள்ளுமாறு போக்குவரத்துத்துறை வலியுறுத்தியுள்ளது.


Next Story