வீரதீர செயல் புரிந்தவர்கள் மத்திய அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம்


வீரதீர செயல் புரிந்தவர்கள் மத்திய அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 29 Jun 2023 12:15 AM IST (Updated: 29 Jun 2023 5:17 PM IST)
t-max-icont-min-icon

வீரதீர செயல் புரிந்தவர்கள் மத்திய அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

வீரதீர செயல் புரிந்தவர்கள் மத்திய அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு விருது

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:- இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளில் (1.10.2021-க்கு பிறகு) ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா தொடர்விருது 3 பிரிவுகளில் வழங்கப்படுகிறது. இதில் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் வழங்கப்படுகிறது.

துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவா்களுக்கு உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் வழங்கப்படுகிறது. தனக்கு காயம் ஏற்பட்டாலும் வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு உயிரை காப்பாற்றுபவா்களுக்கு ஜீவன் ரக்ஷா பதக்கம் வழங்கப்படுகிறது. இந்த விருதுபெற வயது வரம்பின்றி ஆண்,பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கலாம்

எனவே, 2023-ம் ஆண்டிற்கான் வீரதீர செயல் புரிந்த தகுதியுடைய நபர்கள் வருகின்ற 30-ந் தேதி மாலை 5 மணிக்குள் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள, சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story