மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தவர்கள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகாளுக்கு சேவை புரிந்தவர்கள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம். வருகிற 26-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகாளுக்கு சேவை புரிந்தவர்கள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம். வருகிற 26-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருது
தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவைபுரிபவர்கள், சிறப்பாக சேவைபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு, அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சரால் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டும் ஆகஸ்டு 15-ந் தேதி அன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் தமிழக அளவில் சிறப்பாக சேவைபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்கள் ; தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு. தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு கீழ்காணும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த டாக்டர், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியயோருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இந்த விருதுகளுக்கான விண்ணப்ப படிவங்களை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இருந்து பெற்று, பூர்த்தி செய்து உரிய அனைத்து சான்றிதழ்களுடன் 26.6.23 அன்று மாலை 5.30 மணிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், எண் 13 செட்டிகுள சந்து, 5வது புதுத்தெரு, மயிலாடுதுறை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.