மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 15-8-2023 அன்று நடைபெறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ள விருதுகள் பெற விருப்பமுள்ள மற்றும் தகுதியுடையவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறப்பு சமூக பணியாளர், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிகளவில் வேலை வாய்ப்பளித்த தனியார் நிறுவனம், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்கலாம். எனவே விருதுக்கு தகுதியானவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வருகிற 20-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.