மாற்றுத்திறனாளிகள் நலனில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் அம்ரித் தகவல்
மாற்றுத்திறனாளிகள் நலனில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அம்ரித் கூறினார்.
நீலகிரி
ஊட்டி
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டு 15.08.2022 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நிறுவனங்களுக்கு தமிழக முதல்-அமைச்சரால் விருதுகள் சென்னையில் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி இந்த ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கார்டன் சாலை, ஊட்டியில் விண்ணப்பபடிவங்கள் பெற்று 15.07.2022 க்குள் விண்ணப்பித்து பயன் பெற்றுக்கொள்ளலாம். இந்த தகவலை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story