அரசு பள்ளிகளில் பராமரிப்பு, பாதுகாப்பு பணியில் தமிழ் தெரிந்தவர்கள்..! பரிசீலிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
இதுசம்பந்தமாக பரிசீலிக்க டெண்டர் குழுவுக்கு உத்தரவிட்டனர்.
சென்னை,
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளுக்கு தனியார் நிறுவனங்களை அமர்த்த முடிவு செய்து, இதுசம்பந்தமாக டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் கோரி விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு, நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் டெண்டரை எதிர்த்து குவாலிட்டி பிராப் பர்ட்டி மேனேஜ்மெண்ட் நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது
. ஆனால் டெண்டர் நிபந்தனைகளில் தலையிட முடியாது என வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. தற்போது இந்த நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு, 10 லட்சம் சதுர அடி பரப்பில் நிறுவனம் செயல்பட்டிருக்க வேண்டும். ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் வர்த்தகம் செய்திருக்க வேண்டும். 3 ஆயிரம் ஊழியர்களை கொண்டிருக்க வேண்டும் என மாற்றிய மைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், டெண்டர் நிபந்தனைகள், டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டப்படி வெளியிடப்பட்டு உள்ளது. இதை எதிர்க்க முடியாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது. ஆனால், தற்போது நிபந்தனைகளை திருத்தியது ஏன் என எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை. எனவே, டெண்டர் நிபந்தனைகளை ரத்து செய்கிறோம். புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும் கிராமப்புற மாணவர்கள், பெற்றோரின் நலன் கருதி, தகவல் தொடர்புக்கு ஏதுவாக, பாதுகாவலர் பணிக்கும், தூய்மைப் பணியாளர் பணிக்கும் தமிழ் தெரிந்த வரையே கண்டிப்பாக நியமிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்காததைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக பரிசீலிக்க டெண்டர் குழுவுக்கு உத்தரவிட்டனர்.