தோட்டண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
திருப்பத்தூரை அடுத்த விளாங்குப்பம் கிராமத்தில் தோட்டண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
திருப்பத்தூர் தாலுகா, மிட்டூர் அடுத்த விளாங்குப்பம் கிராமத்தில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த குருமன்ஸ் குல தெய்வமான தோட்டண்ணசுவாமி, லிங்கம்மா, லக்கம்மா மற்றும் நந்திகேஸ்வர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குருமன்ஸ் குலகுரு கந்திலி சக்திவேல் தலைமையில் கங்கா பூஜை, கணபதி பூஜை, வாஸ்து பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், பிரவேசபலி, கோ பூஜை, ஆலய பிரவேசம் நடைபெற்றது.
தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை, கலாதுர்ஷனம், சதுர்துவார பூஜை, யாகசாலை பிரவேசம், பரிவார கலசஸ்தாபனம், அக்னி பிரதிஷ்டை, கணபதி ஹோமம், அஷ்டதிக்பாலகனபதி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, நடைபெற்றது.
பின்னர் இரண்டாம் கால யாகசாலை பூஜை, ருத்ர ஹோமம், தோட்டண்ணசுவாமி, லிங்கம்மா, லக்கம்மா, நந்திகேஸ்வரருக்கு பிம்பசுத்தி திரவிய மஹா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
7 ஊர்களில் இருந்து
தொடர்ந்து விளாங்குப்பம் தோட்டண்ணசுவாமி, நாட்டறம்பள்ளி சன்னகுலம் தோட்டராய சுவாமி, திருப்பத்தூர் அலியகுலம் தோரளியப்பசுவாமி, நாச்சார்குப்பம் பண்ணகுலம் சித்தப்பா சுவாமி, ஆண்டியப்பனூர் சங்கினிகுலம் சித்தப்பா சுவாமி, பழைய ஜோலார்பேட்டை பெள்ளிகுலம் சித்தப்பா சுவாமி மற்றும் மிட்டூர் திரவுபதி அம்மன் ஆகிய சாமிகள் 7 ஊர்களில் இருந்து ஊர்வலமாக வந்தன. கோலார் அந்தரள்ளி ருத்ரேஸ் குழுவினரால் வீரகாசி நடனத்துடன் வரவேற்பு, வாணவேடிக்கை. நடைபெற்றது தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பின்னர் மூன்றாம் கால யாகசாலை பூஜை, வீரபத்திரர் ஹோமம், சண்டி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, பிரசாத வினியோகம் மற்றும் கோபுர விமான கலச பிரதிஷ்டையும், நள்ளிரவு 12 மணிக்கு குருமன்ஸ் இனமக்களின் கலாசார சேவை ஆட்டம் நடைபெற்றது.
தலையில் தேங்காய் உடைப்பு
7 ஊர்களிலிருந்து வருகை தந்துள்ள சுவாமிகளுக்கு சிறப்பு பூஜையும், அருள் வந்தவர்களின் தலைமேல் தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.
தொடர்ந்து சுவாமி சிலைகளுக்கு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாத்துதல், ருத்ராபிஷேகம், நான்காம் கால யாகசாலை பூஜை, நாடிசந்தானம், தீபாராதனை, கும்ப யாத்ராதானம் நடந்தது. பின்னர் புனித நீர் கலசங்களை மேள தாளங்களுடன் எடுத்து சென்று கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
தொடர்ந்து மூலவர் தோட்டண்ணசுவாமி, லிங்கம்மா, லக்கம்மா மற்றும் நந்திகேஸ்வரருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை தோட்டண்ணசுவாமி கோவில் தர்மகர்த்தா மற்றும் நிர்வாகிகள், விளாங்குப்பம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.