அரசு பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா


அரசு பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா
x

வடஇலுப்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா வடஇலுப்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்றம் சார்பில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நடந்தது. வெம்பாக்கம் வட்டார வளமைய அலுவலர் பிர்லா (பொறுப்பு) தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தகுமார், திட்ட மேலாளர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வானவில் மன்ற கருத்தாளர்கள் அமுல், காவேரி, தன்னார்வலர் ஜெயபாரதி ஆகியோர் பங்கேற்று அறிவியல் சோதனைகள், கணித செயல்பாடுகள் குறித்து எளிய முறையில் மாணவர்களுக்கு விளக்கிக் கூறினர். அதைத் தொடர்ந்து அரசு பள்ளியின் முக்கியத்துவத்தினை எடுத்துக் கூறியும், அரசு பள்ளியில் மாணவர்களை சேர்த்திட வேண்டும் என பொதுமக்களிடம் வலியுறுத்தினர்.


Next Story