சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்


சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 4 July 2023 1:00 AM IST (Updated: 4 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஆனி மாத பவுர்ணமிையயொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு

ஆனி மாத பவுர்ணமிையயொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்தனர்.

ஆனி மாத பவுர்ணமி

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

வனத்துறை கேட் காலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டது. மேலும் வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை பரிசோதனை செய்த பின்னரே பக்தர்கள் மலையேற அனுமதித்தனர்.

சிறப்பு அபிஷேகம்

ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு மதியம் 12.30 மணிக்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடு நடைபெற்றன..

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story