பஞ்சு விலை குறைந்ததன் காரணமாக நூல் விலை இந்த மாதம் கிலோவுக்கு ரூ.20 சரிந்துள்ளது. வடஇந்தியாவிலும் நூல்விலை குறைந்துள்ளது.


பஞ்சு விலை குறைந்ததன் காரணமாக நூல் விலை இந்த மாதம் கிலோவுக்கு ரூ.20 சரிந்துள்ளது. வடஇந்தியாவிலும் நூல்விலை குறைந்துள்ளது.
x

பஞ்சு விலை குறைந்ததன் காரணமாக நூல் விலை இந்த மாதம் கிலோவுக்கு ரூ.20 சரிந்துள்ளது. வடஇந்தியாவிலும் நூல்விலை குறைந்துள்ளது.

திருப்பூர்

திருப்பூர்

பஞ்சு விலை குறைந்ததன் காரணமாக நூல் விலை இந்த மாதம் கிலோவுக்கு ரூ.20 சரிந்துள்ளது. வடஇந்தியாவிலும் நூல்விலை குறைந்துள்ளது.

பின்னலாடை

பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளாக நூல் உள்ளது. பருத்தி விலை உயர்வு காரணமாக நூல் விலை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அபரிமிதமாக உயர்ந்தது. அதாவது கடந்த ஆண்டைக்காட்டிலும் நூல் விலை கிலோவுக்கு 100 சதவீதம் அதிகரித்தது. இந்த விலை உயர்வால் உள்நாட்டு, வெளிநாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் புதிய ஆர்டர்களை எடுக்கவில்லை. இதன்காரணமாக பனியன் நிறுவனங்களில் வேலை மந்த கதியானது. தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்தித்தனர். இருக்கின்ற ஆர்டர்களை மட்டும் பனியன் நிறுவனத்தினர் செய்து கொடுத்தனர்.

தீபாவளி பண்டிகை ஆர்டர் கூட சரிவர இல்லாமல் போனது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக நூல் விலை குறைய தொடங்கி இருக்கிறது. இதற்கு நூல் வாங்குவதை பனியன் நிறுவனத்தினர் நிறுத்தியதும் ஒரு காரணம் ஆகும். நூற்பாலைகளும் தங்களிடம் இருக்கும் நூல்களை விற்பனை செய்வதற்காக நூல் விலையை குறைத்தன. மேலும் பஞ்சு விலையும் 1 கேண்டி ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ.65 ஆயிரமாக குறைந்துள்ளது.

கிலோவுக்கு ரூ.20 குறைந்தது

நூல் விலையை மாதத்தோறும் 1-ந்தேதி நூற்பாலைகள் அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைந்தது. இந்த மாதத்துக்கான நூல் விலையை நூற்பாலைகள் நேற்று அறிவித்தன. அதன்படி அனைத்து வகை நூலும் கிலோவுக்கு மேலும் ரூ.20 குறைந்துள்ளது. இதனால் தற்போது கோம்டு ரகம் வரி நீங்கலாக 20-ம் நம்பர் கிலோ ரூ.273, 24-ம் நம்பர் ரூ.285, 30-ம் நம்பர் ரூ.295, 34-ம் நம்பர் ரூ.315, 40-ம் நம்பர் ரூ.335 என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது செமி கோம்டு ரகம் 20-ம் நம்பர் ரூ.265, 24-ம் நம்பர் ரூ.275, 30-ம் நம்பர் ரூ.285, 34-ம் நம்பர் ரூ.305, 40-ம் நம்பர் ரூ.325 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் கிலோவுக்கு மேலும் ரூ.20 நூல் விலை குறைந்துள்ளது பனியன் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தற்போது வெளிநாட்டு ஆர்டர்கள் திருப்பூர் நோக்கி வரத்தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் நூல் விலை குறைவு தங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் பனியன் வர்த்தகம் மீண்டும் எழுச்சி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வடஇந்தியாவிலும் குறைந்தது

இதுபோல் வடஇந்திய நூற்பாலைகளும் நூல் விலையை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை குறைத்துள்ளன. பருத்தி விலை குறைவு காரணமாகவும், பனியன் உற்பத்தி நிறுவனங்கள் நூல் தேவையை குறைத்துக் கொண்டதன் காரணமாகவும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு நூற்பாலைகள் நூல் விலையை குறைத்துள்ளது. லூதியானா மற்றும் டெல்லி நூற்பாலைகள் நூல் விலையை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை குறைத்துள்ளன. அதன்படி 30-ம் நம்பர் நூல், வரியை சேர்த்து கிலோ ரூ.300 முதல் ரூ.310-க்கும், 20-ம் நம்பர் ரூ.290-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் பாலியெஸ்டர் நூலிழை விலையும் கிலோவுக்கு ரூ.2 குறைந்துள்ளது. பாலியெஸ்டர் நூலிழை விலை கிலோ ரூ.107-ல் இருந்து ரூ.105 ஆக குறைந்துள்ளது. இது பனியன் உற்பத்தியாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.


Next Story