போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்
அபராதம் விதித்ததால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழனியில், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர்களை மறித்து தணிக்கை செய்தார். அதில் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த வாலிபர்களுக்கு குமரேசன் அபராதம் விதித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், தங்களது நண்பா்களுடன் சேர்ந்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமரேசனுக்கு மிரட்டல் விடுத்தனர். மேலும் அவரது மோட்டார்சைக்கிளை சேதப்படுத்தி சாலையில் தள்ளிவிட்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பழனி மதினா நகர் பகுதியை சேர்ந்த முகமது ஆசிக் அரபா (வயது 22), பெரிய பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த ஆஷிக் ராஜா (22), மதுராநகர் பகுதியை சேர்ந்த அசாருதீன் (22), ஆவணி மூல வீதி ஷாஜகான் (38) உள்பட 6 பேர் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் குமரேசனை மிரட்டியது என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.