விருத்தாசலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய 2 பேர் கைது


விருத்தாசலத்தில்  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய 2 பேர் கைது
x

விருத்தாசலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சிலர் மாணவிகளை கேலி, கிண்டல் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு நின்றிருந்தவர்களிடம் விசாரித்தனர். அப்போது சாவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(வயது 23), விஜயகுமார்(29) ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனாரை ஆபாசமாக திட்டி மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன், விஜயகுமார் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story