காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவிக்கு மிரட்டல்


காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மத்தூர் அருகே காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவிக்கு மிரட்டல் விடுத்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

மத்தூர்

மத்தூர் அருகே காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவிக்கு மிரட்டல் விடுத்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவி

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது மாணவி அரசு கலைக்கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மாணவி தினமும் பஸ்சில் கல்லூரிக்கு சென்று வந்தார். காவேரிப்பட்டணம் சவுட்டஅள்ளி அருகே உள்ள குட்டி வேடிச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி (வயது22). கார் டிரைவர்.

இவர், கல்லூரி மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. அதற்கு மாணவி மறுத்துள்ளார். இதனால் விஜி ஆத்திரமடைந்தார். சம்பவத்தன்று கல்லூரி முடிந்து மாணவி அரசு டவுன் பஸ்சில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது விஜி தன்னை காதலிக்குமாறும், இல்லாவிட்டால் நடப்பதே வேறு என்று மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

கார் டிரைவர் கைது

மேலும் அவர் மாணவியை கன்னத்தில் அறைந்து உள்ளார். இதையடுத்து மாணவி வீட்டுக்கு சென்று விட்டார். அன்று இரவு விஜி தனது நண்பர்களுடன் சென்று அந்த மாணவியின் வீட்டுக்கு சென்று அவருக்கும், அவரது தாயாருக்கும் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் கார் டிரைவர் விஜியை கைது செய்தனர்.


Next Story