கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்
கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்
விருதுநகர்
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் கணேஷ் பாண்டியம்மாள்(வயது 30). இங்கு கூடுதல் கிராம நிர்வாக அலுவலராக நாராயணகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இங்கு சுனிதா என்பவர் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 7-ந் தேதி கிராம அலுவலகத்திற்கு வந்த கான்சாபுரத்தை சேர்ந்த ரத்தினம் என்பவர், தென்னை அடங்கலை காட்டி, சோள பயிர் சேதமடைந்து விட்டதாக சான்று கேட்டு உதவியாளர் சுனிதாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். நேற்று முன்தினம் ரத்தினம் அலுவலகத்திற்கு வந்து பட்டா மாறுதல் செய்து தரக்கோரி கிராம நிர்வாக அதிகாரி நாராயணகுமார், உதவியாளர் சுனிதா ஆகியோரை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் கூமாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, ரத்தினத்தை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story