கத்தியை காட்டி மிரட்டிெதாழிலாளியிடம் பணம் பறிக்க முயற்சி :2 பேர் கைது
கம்பத்தில் கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், கூடலூர் செல்வதற்காக தனது நண்பருடன் கம்பம் புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் நாங்கள் மதுரை ரவுடி என கூறி, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் அவர்கள், மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சக்திவேல் (23), முத்துக்குமார் (22) என்பது தெரியவந்தது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் வழக்குப்பதிந்து சக்திவேல், முத்துக்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதில் சக்திவேல் மீது மதுரை மாவட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு, கொலைமிரட்டல் உள்பட 6 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.