முப்பெரும் விழா


முப்பெரும் விழா
x

ஏரலில் காங்கிரஸ் சார்பில் முப்பெரும் விழா நடந்தது

தூத்துக்குடி

ஏரல்:

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா, 75-வது சுதந்திரதின பவள விழா மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா ஏரல் சினிமா தியேட்டர் அருகில் நடந்தது. இந்த விழாவிற்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட தலைவருமான ஊர்வசி அமிர்தராஜ் தலைமை தாங்கி பேசினார். தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் சிரஞ்சீவி முன்னிலை வகித்தார். விழாவில் நாடாளுமன்ற காங்கிரஸ் கொறடாவும், தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளருமான மாணிக்கம் தாகூர் எம்.பி. சிறப்புரையாற்றினார். தொடர்ந்து அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொற்கிழி வழங்கினார். விழாவில் தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் தலைவர் முரளிதரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ், தலைமை நிலைய பேச்சாளர் பால்துரை, நகர தலைவர் பாக்கர் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம் அருகே விஜயராமபுரம் முத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளி 38-வது ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.


Next Story