முப்பெரும் விழா


முப்பெரும் விழா
x

செங்கோட்டையில் விவேகானந்தர் ஆசிரம முப்பெரும் விழா நடந்தது

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை சேனைத்தலைவா் சமுதாய நலக்கூடத்தில் வைத்து திருக்குற்றாலம் சுவாமி விவேகானந்தா ஆசிரமம் சார்பில், ஸ்ரீசாரதா ஆசிரமத்தின் 25-வது ஆண்டு நிறைவு விழா, ஸ்ரீசுவாமி விவேகானந்தர் ஆசிரமத்தின் 35-வது ஆண்டு விழா, ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் 125-வது ஜெயந்தி விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103-வது ஆதீன கர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கினார். பொறியாளா் லிங்கராஜ், சா மில் உரிமையாளா்கள் லால்ஜீ படேல், மோகன் படேல், சீவ்கன் படேல், காந்தி சேவா மைய நிர்வாகி ராம்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். ஆசிரம மாணவிகள் இறைவணக்கம் பாடினா்.

தென்காசி திருவள்ளுவா் கழக செயலா் சிவராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார். செங்கோட்டை காந்தி சேவா மைய நிறுவனா் விவேகானந்தன், பராசக்தி மகளிர் கல்லூரி முதல்வா் ஜெயநிலாசுந்திரி, மணிமேகலை மன்ற பொதுச்செயலாளா் கோதண்டம், செங்கோட்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி தாளளா் ராணி ராம்மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா்.

சின்னமனுார் ராமகிருஷ்ண ஆசிரம ஸ்ரீமத்சுவாமி முக்தானந்தஜீ, திண்டுக்கல் ராமகிருஷ்ண ஆசிரம தலைவா் ஸ்ரீமத்சுவாமி நித்யசத்வானந்தஜீ, சங்கரன்கோவில் அன்னபூரணாபுரம் ராமகிருஷ்ணா தவக்குடில் தலைவா் ஸ்ரீமத்சுவாமி ராகவானந்தஜீ ஆகியோர் அருளுரை வழங்கினா்.

அதனைதொடா்ந்து ஆசிரம மாணவ, மாணவிகள், ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ, மாணவிகள், தென்காசி அன்னை கலை அகாடமி மாணவர்கள் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சி, பரதநாட்டியம், நாடகம் நடந்தது.

பிரபா முரளி, ரமீலா மோகன்படேல், சந்திரிகா திலீப்படேல், கான்கதா லலித்குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கினா். பின்னா் ஆதரவற்ற பெண்கள் 50 பேருக்கு ஆடைகளும், பெண்களுக்கு இலவச தையல் எந்திரமும் வழங்கப்பட்டது. இதனையடுத்து சுவாமி விவேகானந்தா ஆசிரம ஸ்ரீமத் சுவாமி அகிலானந்தஜீ, ஆத்மபிரியா மாதாஜீ ஆசியுரை வழங்கினா்.

நிகழ்ச்சியில் விவேகானந்தா கேந்திர மாவட்ட பொறுப்பாளா் கருப்பசாமி, கேந்திர தொண்டா்கள் கோமதிநாயகம், பாலகிருஷ்ணன், அய்யப்பன், நகராட்சி உறுப்பினா்கள் பொன்னுலிங்கம் என்ற சுதன், செண்பகராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முடிவில் செங்கோட்டை கல்யாணகுமார் நன்றி கூறினார்.



Next Story