முப்பெரும் விழா
தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா
சின்னசேலம்
சின்னசேலம் தமிழ் சங்கம், கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ் சங்கம் சார்பில் படத்திறப்பு விழா, நூல் வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா சின்னசேலத்தில் உள்ள அரிசி ஆலை மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாதவசின்ராசு தலைமை தாங்கினார். சென்னை மாநகர தமிழ் சங்க தலைவர் பாரதி சுகுமாரன் முன்னிலை வகித்தார். சின்னசேலம் தமிழ் சங்க தலைவர் கவிதைதம்பி வரவேற்றார். சின்னசேலம் தமிழ் சங்க காப்பாளர் ரத்தினவேலு அண்ணாபடத்தை திறந்து வைத்தும், முக்கியமானவர்களின் மூன்று பொன்மொழிகள் என்ற நூலை திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் வெளியிட்டும் பேசினார்கள்.
அதேபோல் பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர், பாரதி நூல் தொகுப்பாசிரியர் நாட்டாண்மை குணசேகரனாவுக்கு விருது வழங்கி பேசினார். வாணிதாசனார் கலை இலக்கிய பேரவை தலைவர் முருகன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து தமிழ் சங்க மாவட்ட நிர்வாகிகள் இந்திரராசன், கிருட்டினா சந்திரன், துரைராசமாணிக்கம், அம்பேத்கர், ஆறுமுகம், தங்கராசு மணிவேல், மணி, நாகராஜன், அனந்தகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் சமூக சேவை அறக்கட்டளை பொருளாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.