அரசு பள்ளியில் முப்பெரும் விழா
வள்ளியூர் அருகே தளபதிசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே தளபதிசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பரமசிவன் தேசிய கொடியேற்றினார். தளபதிசமுத்திரம் பஞ்சாயத்து தலைவர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் ஜேம்ஸ் அருள்ராஜ் ஆகியோர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு வள்ளியூர் டி.டி.என். கல்வி குழும தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கி, கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளி வளர்ச்சி குழு தலைவர் தங்கதுரை, தொழிலதிபர் மாருதி அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியை சோபனகுமாரி வரவேற்று பேசினார். தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தி ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் முத்தம்மாள் மாயகிருஷ்ணன் அறக்கட்டளை தலைவர் மாதவன், தொழில்அதிபர்கள் வேகா லட்சுமணன், வடலிவிளை செழியன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சைலஜா, துணைத்தலைவர் கவிதா, சங்கர், கணேசன், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பிரேமா வேலு, அர்ஜுனன், பார்வதி அம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் வாசுதேவன், பெப்பின் அப்பாத்துரை ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ஆசிரியர் சேர்மகனி நன்றி கூறினார்.