கவிஞர் கண்ணதாசன் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா


கவிஞர் கண்ணதாசன் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை

நெமிலியில் கவியரசு கண்ணதாசன் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தொடக்க விழா, நெமிலி வட்ட தமிழியக்க தொடக்க விழா மற்றும் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் கலந்து கொண்டு நெமிலி கிருஷ்ணமூர்த்தி எழுதிய தமிழுக்கு அமுதென்று பேர் என்ற நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். முதல் பிரதியை நெமிலி ஒன்றியக் குழு தலைவர் வடிவேலு மற்றும் துணைத் தலைவர் தீனதயாளன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் மோகன், இனியவன், உசேன், தமிழ்செல்வி, துரைமுருகன், கருப்பையா, சொர்ணபாரதி, சதாசிவம் உள்ளிட்ட 15 நபர்களுக்கு தமிழறிஞர் விருது வழங்கப்பட்டது. அறக்கட்டளை செயலாளர் வேதையா, துணைத்தலைவர் சுரேந்திரநாத், ரவிக்குமார் ராஜமாணிக்கம், காசி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story