பள்ளி மாணவர் உள்பட 3 பேர் படுகாயம்


பள்ளி மாணவர் உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் பள்ளி மாணவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூரில் இருந்து நேற்று தனியார் பள்ளி பஸ் மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு அய்யன்கொல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. மேங்கோரேஞ்ச் பகுதியில் சென்ற போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது பஸ் திடீரென மோதி விபத்துக்குள்ளானது. அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர் லாலு பிரசாத் (வயது 18), கூடலூர் டேன்டீ தொழிற்பயிற்சி மையத்தில் பணிபுரியும் ஊழியரான தீனதயாளன், பந்தலூரை சேர்ந்த அனீஸ் (18) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தேவாலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story