மும்முனை மின்சார வசதி
செங்கோட்டை 12-வது வார்டில் மும்முனை மின்சார வசதி செய்து கொடுத்தனா்
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி 12-வது வார்டு நீராத்துலிங்கம் தெரு பகுதியில் கடந்த 13 ஆண்டுகளாக ஒருமுனை மின்சார வசதி (சிங்கிள் பேஸ்) இருந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் மும்முனை மின்சார வசதி செய்து தரக்கோரி சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால் மும்முனை மின்சார வசதி செய்து தரப்படாமல் இருந்துள்ளது. இந்தநிலையில் தற்போதைய அந்த வார்டு நகர்மன்ற உறுப்பினா் இசக்கித்துரை பாண்டியனிடம் அந்த பகுதி பொதுமக்கள் மும்முனை மின்சார வசதி செய்து தரக்கோரி கோரிக்கை வைத்தனா். இதனையடுத்து இசக்கித்துரை பாண்டியன் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து மின்வாரிய அலுவலர்கள் நீராத்துலிங்கம் தெரு பகுதிக்கு சென்று மின் பாதைகளை சரி செய்து அப்பகுதிக்கு மும்முனை மின்சார வசதி செய்து கொடுத்தனா். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதை அறிந்து அப்பகுதி பொதுமக்கள் 12-வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் இசக்கித்துரை பாண்டியன் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள், அலுவலா்கள், மின் ஊழியா்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.