பாம்பன் தூக்குப்பாலத்தில் மோதுவது போல் சென்ற மிதவை கப்பலால் பரபரப்பு


பாம்பன் தூக்குப்பாலத்தில் மோதுவது போல் சென்ற மிதவை கப்பலால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் தூக்குப்பாலத்தில் மோதுவது போல் சென்ற மிதவை கப்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக வந்து 3 நாட்களுக்கு மேலாக இழுவை மற்றும் மிதவை கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் தூக்குப்பாலம் நேற்று திறக்கப்பட்டது.

இதில் இழுவை கப்பல் மும்பையில் இருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா செல்வதற்காக வந்ததாகும். இந்த கப்பல் தூக்குப்பாலத்தை மெதுவாக கடந்து சென்றது.

கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து காக்கிநாடா துறைமுகம் செல்வதற்காக இழுவை கப்பல் ஒன்று மிதவை கப்பலை இழுத்தபடி தூக்குப்பாலத்தை மெதுவாக கடந்து சென்றது. அது பெரிய மிதவையாக இருந்ததால் பாதுகாப்பாக கடந்து செல்வதற்கு வசதியாக பாம்பனை சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் அந்த மிதவை கப்பலின் பின் பகுதியில் கயிறு மூலம் இணைத்து வழிகாட்டி படகுகளாக பின்பகுதியில் சென்றன. தூக்குப்பாலத்தை மிதவை கடந்து சென்றபோது கடல் நீரோட்டத்தின் வேகம் சற்று அதிகமாகவே இருந்ததால் அந்த மிதவையானது தூக்குப்பாலத்தில் உரசுவது போன்று சென்றது.

ஆனால் பின்பகுதியில் சென்ற இரண்டு மீன்பிடி படகுகள் உதவி இருந்ததால், தூக்குப்பாலத்தில் உரசாமல் பாதுகாப்பாக கடந்து சென்றது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தென்கடல் பகுதியில் இருந்து வடக்கு கடல் பகுதி செல்வதற்காக நாகப்பட்டினத்ைத சேர்ந்த ஏராளமான ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் தூக்கு பாலத்தை கடந்து சென்றன. இவ்வாறு தூக்குப்பாலத்தை கடந்து சென்ற ஆழ்கடல் மீன்பிடி படகு ஒன்றின் ஆண்டனா கம்பி தூக்குப்பாலத்தில் உரசியபடி சென்றது. இதில் அந்த படகின் ஆண்டனா லேசான சேதம் அடைந்ததாகவும், பாலத்தில் சேதம் இல்லை என்றும் கூறப்படுகிறது.


Next Story