விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம்தூத்துக்குடியை குற்றமில்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை:போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தகவல்


விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம்தூத்துக்குடியை குற்றமில்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை:போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தகவல்
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தூத்துக்குடியை குற்றமில்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைப்பு கூட்டம்

ஓட்டப்பிடாரம் தாலுகா புளியம்பட்டி அருகே உள்ள சவலப்பேரி கிராமத்தில் குற்றமில்லா மாவட்டமாக மாற்றுவதற்கான பொதுமக்கள் விழிப்புணர்வு சமூக ஒருங்கிணைப்பு கூட்டம் போலீஸ்துறை சார்பில் இந்து நாடார் திருமண மண்டபத்தில் நடந்தது.

இக்கூட்டத்திற்கு மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் கலந்து கொண்டு பேசுகையில்,

தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக மாற்றுவதற்காகத்தான் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

வீடுகள் தோறும் விழிப்புணர்வு

மாவட்டத்திலுள்ள ஒவ்வொருவருடைய மாற்றமும் சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வரும். கிராமங்கள் தோறும், வீடுகளிலும் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல், விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பு செய்து வருகிறோம். வருங்கால நம்முடைய சந்ததிகளுக்கு நிம்மதியான மகிழ்ச்சியான சமுதாயத்தை உருவாக்கி கொடுப்பது நமது பொறுப்பாகும். அதனால் நாம் ஜாதி வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக இருந்து நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும், என்றார்.

உறுதி மொழி ஏற்பு

அதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, குற்றமில்லாத மாவட்டமாக தூத்துக்குடியை மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்போம் என உறுதி எடுத்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தர்மர் (புளியம்பட்டி), சுதந்திரதேவி (மணியாச்சி), போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ் நாராயணன், ரமேஷ்குமார் மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story