தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வேண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு


தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம்  விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வேண்டும்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு
x
தினத்தந்தி 13 Oct 2022 1:00 AM IST (Updated: 13 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு

ஈரோடு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு மனு அனுப்பி உள்ளார்.

தள்ளுபடி

தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கீழ்பவானி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு, நடவு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு அடங்கல் பிரச்சினையில் விதி மீறல் உள்ளதாக தெரிவித்து, தள்ளுபடி செய்யப்பட்ட பயிர் கடன் தொகை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு கிடைக்கப்பெறாமல் உள்ளது.

புதிய பயிர் கடன்

இதனால் சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய கடன்கள் வழங்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மறுத்து வருகிறது. மேலும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது என நினைத்துள்ள விவசாயிகளின் கடன்கள் மீண்டும் வசூலிக்கப்படும் நிலை ஏற்பட்டு விடுமோ என விவசாயிகள் அச்சப்படுகிறார்கள்.

நடவு பணிகள் நடந்து வரும் இந்த நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு புதிதாக பயிர் கடன் வழங்க தயங்குவதால் அனைத்து விவசாயிகளும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். எனவே ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் புதிய கடன் வழங்க ஆவன செய்திட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி உள்ளார்.


Next Story