இளம்பெண்ணுக்கு 'வாட்ஸ்-அப்' மூலம் ஆபாச குறுந்தகவல்-குடிநீர் கேன் விற்பனையாளர் கைது


இளம்பெண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம்   ஆபாச குறுந்தகவல்-குடிநீர் கேன் விற்பனையாளர் கைது
x

நெல்லையில் இளம்பெண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்த குடிநீர் கேன் விற்பனையாளரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லையில் இளம்பெண்ணுக்கு 'வாட்ஸ்-அப்' மூலம் ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்த குடிநீர் கேன் விற்பனையாளரை போலீசார் கைது செய்தனர்.

குடிநீர் கேன் விற்பனையாளர்

நெல்லை தச்சநல்லூர் கணபதி மில் காலனியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 54). இவர் வீடு வீடாக சென்று தண்ணீர் கேன் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவர் கடந்த சில நாட்களாக தச்சநல்லூர் வடக்கு பகுதியை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் செல்போனுக்கு 'வாட்ஸ்-அப்' மூலமாக ஆபாச குறுந்தகவல் அனுப்பி வந்துள்ளார். இதனை அந்த பெண் கண்டித்தும், செல்வகுமார் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார்.

கைது

சம்பவத்தன்று செல்வகுமார் அந்த பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசியும், வாட்ஸ்-அப்பில் குறுந்தகவல் அனுப்பியும் தொந்தரவு செய்தார். இதுகுறித்து அந்த பெண், தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தார்.


Next Story