அமைச்சர் காரில் செருப்பு வீசியது கண்டிக்கத்தக்கது


அமைச்சர் காரில் செருப்பு வீசியது கண்டிக்கத்தக்கது
x

மதுரையில் அமைச்சர் காரில் செருப்பு வீசியது கண்டிக்கத்தக்கது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. பேட்டி

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் 60-வது பிறந்த நாள் விழா நாகர்கோவில் வடசேரியில் உள்ள அம்பேத்கர் சிலை முன் நேற்று நடந்தது. விழாவில் ஷாநவாஸ் எம்.எல்.ஏ. பங்கேற்று கேக் வெட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசியல் கலாசாரத்தில் பா.ஜனதா கட்சி அதன் பன்முகத்தன்மையை காட்டி வருகிறது. அந்த கட்சியின் அணுகுமுறை எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கும் என்பதற்கு மதுரையில் நடந்த சம்பவம் சாட்சியாக இருக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக எல்லோரையும் தேசியக்கொடி ஏற்றுங்கள் என்று சொல்லிவிட்டு, தேசியக் கொடி ஏற்றப்பட்ட காரில் வந்த தமிழக நிதி அமைச்சரின் கார் மீது செருப்பை வீசி இருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தாக்குதலில் ஈடுபட்டவரே அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தி.மு.க.வில் வந்து சேரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ராகுல்காந்தி நாடு தழுவிய அளவில் நடைபயணம் தொடங்க இருப்பது வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story