டாஸ்மாக் ஊழியரை வெட்டியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
குளச்சல் அருகே டாஸ்மாக் ஊழியரை வெட்டிய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
குளச்சல்:
குளச்சல் அருகே டாஸ்மாக் ஊழியரை வெட்டிய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
டாஸ்மாக் ஊழியருக்கு வெட்டு
குளச்சல் அருகே இரும்பிலி பொட்டல்கரையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 53). இவர் குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றினார்.
கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி இவர் கடையில் வசூலான பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டின் அருகே இரவு நேரத்தில் சென்ற போது அவரை மர்மஆசாமி பணம் பறிக்கும் நோக்கில் வெட்டினார். ஆனால் பொதுமக்கள் திரண்டு வந்ததால் அந்த ஆசாமி அங்கிருந்து தப்பி விட்டார். இதனால் ரூ.6½ லட்சம் தப்பியது. மர்மஆசாமி தாக்கியதில் கோபாலகிருஷ்ணன் படுகாயமடைந்தார்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மேற்கு நெய்யூர் சரலை சேர்ந்த அருண் சஜு (30) என்பவர் டாஸ்மாக் மேற்பார்வையாளரை வெட்டியது தெரியவந்தது. அதே மாதத்தில் 25-ந் தேதி அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் போலீசார் பரிந்துரையின் பேரில் அருண் சஜுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். இதையடுத்து குளச்சல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி அருண் சஜு மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.