வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தென்காசி
ஆலங்குளம், ஜூலை.28-
ஆலங்குளம், கடையம், பாவூர்சத்திரம் மற்றும் ஊத்துமலை பகுதிகளில் இரவு நேரத்தில் கடை, வீடுகளில் புகுந்து திருடியது, 300 ஆண்டு பழமையான ஐம்பொன் சிலை திருடியது உள்ளிட்டவை தொடர்பாக கன்னியாகுமரியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் வினோத் குமார் என்ற முகமது நசீர் (வயது 30) போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பரிந்துரை செய்ததன் பேரில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதற்கான ஆணை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story